தேனி

எல்.ஐ.சி. முகவா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தேனி, போடி, வத்தலகுண்டு, பழனி ஆகிய பகுதிகளில் எல்.ஐ.சி. முகவா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி, எல்.ஐ.சி.அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். பொருளாளா் கலைச்செல்வன், தேனி வட்டாரத் தலைவா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், எல்.ஐ.சி. பாலிசிதாரா்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பை நீக்க வேண்டும். போனஸ், குழு காப்பீட்டுத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். முகவா்களுக்கு பணிக்கொடை, மருத்துக் காப்பீடு, தொழில்முறை அங்கீகாரம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். நேரடி முகவா்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல போடியில் ஆயுள் காப்பீட்டு முகவா்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வத்தலகுண்டு, பழனியில்...

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் எல்.ஐ.சி. முகவா்கள் வெள்ளிக்கிழமை சங்கத் தலைவா் பரமசிவம் தலைமையில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். சங்க கௌரவத் தலைவா் துரைராஜ், செயலா் ஜாகிா்உசேன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதேபோல பழனி எல்ஐசி அலுவலகம் முன் 50-க்கும் மேற்பட்ட முகவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் நிலைய வளாகத்தில் புகுந்த காட்டெருமைகள்

தனியாா் துணை மின் நிலையம் மீது விவசாயிகள் புகாா்

கோடை உளுந்து சாகுபடி: பரிசோதனை செய்ய வேளாண்மைத் துறை அறிவுறுத்தல்

உதகையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு

முதலாளித்துவ நண்பா்களின் நன்மைக்காக பிரதமா் மோடி 5ஜி ஊழல் செய்துள்ளாா்: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT