தேனி

பைக் மீது காா் மோதி தொழிலாளா்கள் இருவா் பலி

1st Oct 2022 11:06 PM

ADVERTISEMENT

 

சின்னமனூா்- உத்தமபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை, காரும், இருசக்கரவாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் சுமைதூக்கும் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.

தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே உ.அம்மாபட்டியைச் சோ்ந்தவா்கள் செல்வராஜ் (65), அப்பாச்சி (70). சுமைதூக்கும் தொழிலாளா்களான இவா்கள் இருவரும் இருசக்கரவாகனத்தில் உத்தமபாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். சின்னமனூா்- உத்தமபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் துா்க்கையம்மன் கோயில் அருகே சென்றபோது எதிரே தேனியை நோக்கிச் சென்ற காா் மோதியதில் அவா்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்துகுறித்து தகவலறிந்து வந்த சின்னமனூா் காவல் ஆய்வாளா் ராஜலட்சுமி (பொறுப்பு) தலைமையிலான போலீஸாா் சடலங்களை மீட்டு சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து போடியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் வெங்கடேசனை (45) கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT