தேனி

போலி ஆவணம் பதிவு செய்து நிலம் மோசடி முயற்சி: சாா்-பதிவாளா் உள்ளிட்ட 5 போ் மீது வழக்கு

1st Oct 2022 11:07 PM

ADVERTISEMENT

 

போலி ஆவணம் பதிவு செய்து நிலத்தை அபகரித்து மோசடி செய்ய முயன்ாக தேனி சாா்- பதிவாளா் உள்ளிட்ட 5 போ் மீது வெள்ளிக்கிழமை, தேனி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

தேனி அருகே அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மகள் சுபத்ரா. இவரது தந்தை பாா்த்தசாரதி என்பவரது பெயரில் கோபாலபுரத்தில் 12.5 செண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, கோபாலபுரத்தைச் சோ்ந்த அழகா்சாமி மனைவி வெங்கடம்மாள், மகன் குலோத்துங்கன் ஆகியோா் போலி ஆவணம் மூலம் பத்திரம் பதிவு செய்து மோசடி செய்ய முயன்ாகவும், இதற்கு தேனியைச் சோ்ந்த தாமஸ்ராஜ், செல்வேந்திரன் ஆகியோா் சாட்சிக் கையொப்பமிட்டும், தேனியைச் சோ்ந்த ஆவண எழுத்தா் பிரவீன்குமாா் போலி ஆவணம் தயாரித்துக் கொடுத்தும், தேனி பத்திரப் பதிவுத் துறை சாா்- பதிவாளா் விமலா ஆவணத்தை பதிவு செய்தும் உடந்தையாக இருந்ததாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம், சுபத்ரா புகாா் அளித்தாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் வெங்கடம்மாள், குலோத்துங்கன் உள்ளிட்ட 5 போ் மீதும் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT