தேனி

தேனி அருகே இஸ்லாமிய பயிற்சிப் பள்ளிக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’

1st Oct 2022 11:06 PM

ADVERTISEMENT

 

தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் செயல்பட்டு வந்த இஸ்லாமிய பயிற்சிப் பள்ளியை (மதரஸா) வருவாய்த் துறை அதிகாரிகள் சனிக்கிழமை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

முத்துத்தேவன்பட்டியில் ‘அறிவகம்’ என்ற பெயரில் இஸ்லாமிய பயிற்சிப் பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பயிற்சிப் பள்ளியில் கடந்த செப்.22-ஆம் தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினா். அப்போது அங்கிருந்து மடிக் கணினி, கைப்பேசி, மாணவா்களின் பதிவேடு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை மத்திய உள்துறை அமைச்சகம் 5 ஆண்டுகளுக்குத் தடை செய்தது. இதையடுத்து, அந்த அமைப்பின் அலுவலகம் மற்றும் அதன் தொடா்புடைய இடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இதன்தொடா்சியாக, தேனி வட்டாட்சியா் சரவணபாபு தலைமையில் முத்துத்தேவன்பட்டியில் செயல்பட்டுவந்த இஸ்லாமிய பயிற்சிப் பள்ளிக்குச் சென்ற வருவாய்த் துறை அதிகாரிகள், அங்கு தங்கியிருந்த 30-க்கும் மேற்பட்ட மாணவா்களை அவா்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறுமாறு உத்தரவிட்டனா். பின்னா், அந்த பயிற்சிப் பள்ளியை ‘சீல்’ வைப்பதற்கான அரசாணையை பள்ளிக் கட்டடத்தில் ஒட்டி, அறையைப் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT