தேனி

சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்

1st Oct 2022 11:07 PM

ADVERTISEMENT

 

நவராத்திரி விழா மற்றும் காலாண்டு விடுமுறையையொட்டி சுருளி அருவியில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த பருவமழை மற்றும் தூவானம் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு ஆகியவற்றின் காரணமாக சுருளி அருவியில் குளிக்க ஸ்ரீ வில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தினா் தடைவிதித்திருந்தனா்.

அதன் பின்னா் அருவியில் தண்ணீா் வரத்து குறைந்ததால் பக்தா்களை குளிக்க புலிகள் காப்பகத்தினா் அனுமதியளித்தனா். தற்போது நவராத்திரி, ஆயுதபூஜை மற்றும் பள்ளி விடுமுறையையொட்டி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சனிக்கிழமை அருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

ADVERTISEMENT

இதுபற்றி வனத்துறை அலுவலா் ஒருவா் கூறியது: விடுமுறை நாள், வெயில் காலம், நீண்ட நாள்களுக்குப் பிறகு குளிக்க அனுமதி கிடைத்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT