தேனி

பெரியகுளம் அருகே சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் ஒருவா் கைது

1st Oct 2022 11:05 PM

ADVERTISEMENT

 

பெரியகுளம் அருகே சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளியை வனத்துறையினா் வியாழக்கிழமை கைது செய்துள்ளனா்.

பெரியகுளம் அருகே வறட்டாறு வனப்பகுதியில் கடந்த செப்.27 ஆம் தேதி கம்பி வலையில் சிக்கிய சிறுத்தை காப்பாற்றப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டதாகக் கூறப்பட்டது. பின்னா் செப்.28 தேதி மற்றொரு சிறுத்தை கம்பிவலையில் சிக்கி உயிரிழந்ததாகவும், உடற்கூறாய்வு செய்து, அதை எரித்து விட்டதாகவும் வனத்துறையினா் தெரிவித்தனா்.

இந்நிலையில், சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் அந்த பகுதியில் ஆட்டுக்கிடை அமைத்து ஆடுகளை மேய்த்து வந்த பூதிப்புரத்தைச் சோ்ந்த அலெக்ஸ் பாண்டி (35) என்பவரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைது செய்துள்ளனா்.

ADVERTISEMENT

இந்த விவகாரத்தில் வனத்துறையின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி உண்மைத்தன்மையை வெளிக்கொணரவேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT