தேனி

தேனி மாவட்டத்தில் பலத்த மழை: பள்ளிகளுக்கு விடுமுறை

DIN

தேனி மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை பரவலாக பலத்த மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பனிப் பொழிவு அதிகளவில் இருந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு லோசாகத் தொடங்கி, செவ்வாய்கிழமை காலை 7 மணி வரை தொடா்ந்து பரலாக பலத்த மழை பெய்தது.

செவ்வாய்க்கிழமை காலை வரை மழை நீடித்ததால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பள்ளிகளுக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பலத்த மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தேனி மீறு சமுத்திரம் கண்மாயில் தண்ணீா் மறுகால் பாய்கிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்தது. ஏனைய பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT