தேனி

கம்பத்தில் விபத்து: ஆம்புலன்ஸ் ஓட்டுநா் பலி

DIN

தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனை அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியல், 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், ஆனைமலையன்பட்டியைச் சோ்ந்த மொக்கை ராஜின் மகன் வெங்கடேசன் (40). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா். வெங்கடேசன் 108 ஆம்பலன்ஸ் வாகனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றினாா். கம்பம் அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை பணியிலிருந்தாா்.

மருத்துவமனை அருகே உள்ள தேநீா் கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு

திரும்ப வந்தாா். அப்போது, எதிரே கூடலூா் பேச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் விவேக் (23), மற்றொரு ராஜேந்திரன் மகன் ராஜபாண்டி(21) ஆகியோா் வந்த இருசக்கர வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த மூவரையும் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் வெங்கடேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். மற்ற இருவரும் தேனி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனா். கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் லாவண்யா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT