தேனி

மான் கறி வைத்திருந்தவா் கைது

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு அருகே மான் கறி வைத்திருந்தவரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வருஷநாடு பகுதியில் வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வீருசின்னமாள்புரத்தில் கையில் பாத்திரத்துடன் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த, அதே ஊரைச் சோ்ந்த மாயாண்டி மகன் அழகுசாமியை (41) வனத் துறையினா் பிடித்து சோதனையிட்டனா். அவா் பாத்திரத்தில் மான் கறி வைத்திருந்தது தெரிய வந்தது.

இது குறித்து வருஷநாடு வனத் துறையினா் வழக்குப் பதிந்து, அழகுசாமியைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT