தேனி

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கோ.மோகன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட சட்டச் செயலா் சீனிவாசன், மாவட்டச் செயலா் மலைச்சாமி, மாநில பொதுக் குழு உறுப்பினா் வேல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணிகள் தவிர வேறு பணிகள் வழங்கக் கூடாது, முடக்கி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயா்வு, ஓப்படைப்பு விடுப்பு ஊதியம் வழங்க வேண்டும், கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை நியமிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு பணி வரன் முறை செய்ய வேண்டும், ஒவ்வொரு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கும் 8 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT