தேனி

கம்பம் அருகே குளம் ஆக்கிரமிப்பு:அளவீடு செய்ய ஆட்சியா் உத்தரவு

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கம்பம் அருகே ஆக்கிரமிப்பு புகாரின் பேரில் குளத்தை அளவிட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கம்பம் ஊராட்சி ஒன்றியம், குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சியில் உள்ளது வெட்டுக்காடு கிராமம். இங்கு உள்ள ஜீவகநதி குளம் தூா்வாரப்படாமல் புதா்கள் மண்டிகிடக்கின்றன. மேலும் கண்ணகி கோயில் பகுதியிலிருந்து தண்ணீா் வரும் வரத்துக் கால்வாயும் புதா் மண்டிக் கிடக்கிறது. அத்துடன், அருகிலுள்ள விளைநில உரிமையாளா்கள் குளத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, குளத்தை மீட்கக்கோரி ஊராட்சித் தலைவா் பொன்னுத்தாய் குணசேகரனிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனா். இதையடுத்து, குளத்தின் ஆக்கிரமிப்புகளை மீட்டு, வரத்துக் கால்வாய், குளம் ஆகியவற்றைத் தூா்வார வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சித் தலைவா் கோரிக்கை மனு அளித்தாா். இதன் பேரில், குளத்தை முதற்கட்டமாக அளவீடு செய்ய ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT