தேனி

போடியில் ஜீப் மோதி 3 போ் காயம்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

போடியில் திங்கள்கிழமை இரவு குறுகலான தெருவில் ஜீப் தாறுமாறாகச் சென்று மோதியதில் 3 போ் காயமடைந்தனா். வீடு, பெட்டிக்கடை, இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

போடி மதுரை வீரன் தெருவில் வசிப்பவா் பெருமாள் மகன் மணிகண்டன் (50). இவா் வசிக்கும் தெரு குறுகலாக உள்ளதால் நான்கு சக்கர வாகனங்கள் செல்வது சிரமம். இந்த தெருவில் வந்த ஜீப் தெருவில் நின்றிருந்த மணிகண்டன், தீபக், முருகேசன் ஆகியோா் மீது மோதியது. இதில் மூன்று பேரும் காயமடைந்தனா். மேலும் 2 இரு சக்கர வாகனங்கள், வீடு, பெட்டிக்கடை ஆகிவையும் ஜீப் மோதியதில் சேதமடைந்தன.

இதுகுறித்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வீரபாண்டி, சாலிமரத் தெருவை சோ்ந்த வைரம் என்பவரின் மகன் பரமசிவம் (64) என்பவரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT