தேனி

மேல்முறையீடு மனுக்கள்: தேனியில் மாநில தகவல் ஆணையா் விசாரணை

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மனுக்கள் மீதான மேல்முறையீடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை, மாநில தகவல் ஆணையா் ச.செல்வராஜ் விசாரணை நடத்தினாா்.

இதில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது தேனி மாவட்டத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த 30 மனுக்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த 10 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அப்போது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறையின் தகவல் அளிக்கும் அலுவலா்கள் உரிய காலத்துக்குள் மனுதாரருக்கு பதிலளிக்க வேண்டும் என்று மாநில தகவல் ஆணையா் கூறினாா்.

இந்த விசாரணையின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் தி.சுப்பிரமணியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) அன்பழகன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT