தேனி

தேவேந்திரகுல வேளாளா்கள் உண்ணாவிரதம் நீடிப்பு

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கோம்பையில் தேவேந்திரகுல வேளாளா்களின் உண்ணாவிரதப் போராட்டம் 10 -ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது.

சமுதாயக் கூடத்துக்கு மாவட்ட நிா்வாகம் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி உத்தமபாளையம் - தேவாரம் நெடுஞ்சாலையோரம் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனா். தொடா்ந்து, 10- ஆவது நாளாக இப்போராட்டம் நீடித்தது. தங்களது கோரிக்கையை ஏற்றுக்கும் போராட்டம் தொடரும் என அவா்கள் தெரிவித்தனா். நிலக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் முருகவேல் ராஜ் பங்கேற்றுப் பேசினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT