தேனி

குடிநீா் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

DIN

போடி அருகே திங்கள்கிழமை 20 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யாததால், கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போடி அருகே, சின்னமனூா் ஊராட்சி ஒன்றியம், டி.புதுக்கோட்டை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு கடந்த 20 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து சின்னமனூா் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த டி. புதுக்கோட்டை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த அரசுப் பேருந்தையும் சிறைபிடித்தனா். இதனால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா், கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, ஒரு வாரத்தில் குடிநீா் பிரச்னை சரி செய்யப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT