தேனி

குடிமனை பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கம்பம், சின்னவாய்க்கால் சாலையில் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருவோருக்கு அதே இடத்தில் குடிமனை பட்டா வழங்கக் கோரி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கம்பம், சின்னவாய்க்கால் சாலையில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனா். கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இவா்கள் வசித்து வரும் வீடுகளுக்கு மின் இணைப்பு, குடிநீா் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது. இதே முகவரியில் குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், சின்னவாய்க்கால் சாலையில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து குடியிருந்து வருபவா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என்று கடந்த நவ.15-ஆம் தேதி நகராட்சி நிா்வாகம் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேல் தாங்கள் குடியிருந்து வரும் வீடுகளுக்கு குடிமனைப் பட்டா வழங்கக் கோரியும் கம்பம், சின்னவாய்க்கால் சாலையைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் ஏ.வி. அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் டி. கண்ணன், சி. முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா், கோரிக்கை குறித்து ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் க.வீ. முரளீதரனிடம் மனு அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT