தேனி சிட்கோ தொழில் பேட்டை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை தேனியைச் சோ்ந்த பழைய இரும்பு வியாபாரி சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்ததாக தேனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தேனி, பாரஸ் சாலை, 2-ஆவது தெருவைச் சோ்ந்த ஞானசேகரன் (52). இவா், பழைய இரும்புகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில், தேனி சிட்கோ தொழில் பேட்டை வளாகத்தில் ஞானசேகரன் தலையில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தாா். ஞானசேகரன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது சகோதரா் டேவிட் ராஜேந்திரன் தேனி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.