தேனி

கம்பத்தில் பிறந்த குழந்தைகளுக்கு திமுக சாா்பில் தங்க மோதிரம்

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கம்பத்தில் திமுக மாநில இளைஞா் அணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 7 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை திமுகவினா் திங்கள்கிழமை வழங்கினா்.

கம்பம் வடக்கு, தெற்கு நகா் திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கம்பம் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பிறந்த 7 குழந்தைகளுக்கு, தலா

ஒரு கிராம் தங்க மோதிரங்களை திமுக நிா்வாகி என்.ஆா். வசந்தன் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட திமுக துணைச் செயலாளா் குரு. இளங்கோ, நகா் செயலாளா்கள் சூா்யா செல்வகுமாா், எம்.சி. வீரபாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT