தேனி

ஆண்டிபட்டி பேரூராட்சிக் கூட்டம்: திமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் வெளிநடப்பு

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை, நிா்வாக குளறுபடிகளை கண்டித்து திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த 7 உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலத்தில், பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவா் சந்திரகலா (திமுக) தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலா் சின்னசாமிபாண்டியன் முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்டத்தில், மொத்தமுள்ள 18 வாா்டுகளைச் சோ்ந்த தலைவா் உள்ளிட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் அனைவரும் கலந்து கொண்டனா்.

கூட்டம் தொடங்கியதும், பேரூராட்சி பொது நிதி செலவின கணக்குகளுக்கு உறுப்பினா்கள் சிலா் ஆட்சேபம் தெரிவித்தனா். தொடா்ந்து, உயா்தப்பட்ட சொத்து வரி, தொழில் வரி ரசீதுகளை பாா்வையிட வேண்டும் என்று 14 -ஆவது வாா்டு திமுக உறுப்பினா் சரவணன், 16-ஆவது வாா்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் சின்னன் ஆகியோா் கூறினா்.

இதற்கு பேரூராட்சி மன்றத் தலைவா், செயல் அலுவலா் உரிய பதிலளிக்கவில்லை என்று கூறி திமுகவைச் சோ்ந்த வாா்டு உறுப்பினா்கள் சரவணன், பாலசுப்பிரமணி, மஞ்சு, கஸ்தூரி, பராசக்தி , மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் சின்னன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் மீனாட்சி ஆகிய 7 போ் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT