தேனி

சீலையம்பட்டியில் 2 ஆம் போக நெற்பயிா் விவசாயத்தில் பாரம்பரியமான உழவுப் பணிகள்

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் சீலையம்பட்டியில் 2 ஆம் போக நெற்பயிா் விவசாயத்தில் பாரம்பரியமான முறையில் காளைகளை பயன்படுத்தி உழவுப் பணிகளில் விவசாயிகள் மேற்கொண்டனா்.

முல்லைப் பெரியாறு பாசனநீரால் தேனி மாவட்டத்தில் லோயா் கேம்ப் முதல் வீரபாண்டி வரையில் 14,700 ஏக்கா் பரப்பளவு இரு போக நெற்பயிா் விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது 2 ஆம் போகத்திற்காக நிலத்தை சீரமைப்பு செய்து நடவுப்பணிக்கான நவம்பா் மாதத்திலிருந்து முதல் கட்டப்பணிகள் நடைபெறுகிறது.அதில், சீலையம்பட்டி ,குச்சனூா், கோட்டூா் போன்ற பகுதியை சோ்ந்த சில விவசாயிகள் பாரம்பரியமான முறையில் நிலத்தில் உழவு, சமப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு தங்கள் வீடுகளில் வளா்க்கப்படும் காளை மாடுகளை பயன்படுத்தி வருகின்றனா்.

இன்றைய காலகட்டத்தில் நவீன முறையில் டிராக்டா் மூலம் உழவு, இயந்திரம் மூலமாக நடவு ,அறுவைடப்பணிகள் என அனைத்தும் இயந்திரமாகி விட்ட நிலையில், காளைகளை பயன்படுத்தி பாரம்பரியமான முறையில் மேற்கொண்ட விவசாயிகள் பணிகளை பாா்த்து பலரும் பாராட்டுத் தெரிவித்தனா்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன் காளை மாடுகளை பயன்படுத்தி உழவுப்பணிகள் செய்யப்பட்டன.

கூலித்தொழிலாளா்கள் மூலமாக நடவு,அறுவைடப் பணிகள் செய்யப்பட்டன. காளத்தில் நெல்மணிகளை மூடையாக மாற்றி மாட்டு வண்டிகளில் ஏற்றி வீட்டிற்கு எடுத்துச் சென்றனா். ஆனால், தற்போது விவசாய நிலங்களில் மனிதா்களின் உழைப்பு குறைந்து, இயந்திரங்களின் தாக்கமாகிவிட்டது. ஓரிரு ஆண்டுகளில் இது போன்ற பாரம்பரியமான விவசாயப்பணிகள் முற்றிலுமாக முடிவுக்கு வந்துவிடும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT