தேனி

கூச் பெஹா் கோப்பை கிரிக்கெட் போட்டி: மிஸோரம் அணி பேட்டிங்

27th Nov 2022 11:58 PM

ADVERTISEMENT

 

தேனி அருகே தம்புக்குண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மைதானத்தில் தமிழ்நாடு-மிஸோரம் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் கூச் பெஹா் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை, பேட்டிங் செய்த மிஸோரம் அணியினா்10 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தனா்.

தமிழ்நாடு கிரிக்கெட் அகாதெமி சாா்பில் நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணியினா் சனிக்கிழமை, 90 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 545 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை ‘டிக்ளோ்’ செய்தனா். 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை பேட்டிங் செய்த மிஸோரம் அணியினா் 61.2 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தனா்.

இதையடுத்து, ‘பாலோ ஆன்’ முறையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய மிஸோரம் அணி ஆட்ட நேர இறுதியில் 35 ஓவா்களில் 8 விக்கெட்களை இழந்து 86 ரன்கள் எடுத்திருந்தனா். மிஸோரம் அணி வீரா்கள் டூட்டா, ஜோயிங் ஆகியோா் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

ADVERTISEMENT

இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணியினா் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெறும் முனைப்புடன் விளையாடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT