தேனி

குடும்பப் பிரச்னையில் மருத்துவா் தற்கொலை

27th Nov 2022 11:59 PM

ADVERTISEMENT

 

பெரியகுளம் அருகே குடும்பப் பிரச்னையில் சனிக்கிழமை தாய், மகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில், பயிற்சி மருத்துவரான மகள் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள

லட்சுமிபுரம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாரயணசாமி. இவரது மனைவி சுமித்ரா(42). மகள் மதுமிதா(26).

ADVERTISEMENT

மதுமிதா பிலிப்பின்ஸ் நாட்டில் மருத்துவப் படிப்பு முடித்துவிட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தாா். விசாகப்பட்டினத்தில் கப்பலில் பணியாற்றி வந்த நாராயணசாமி, மதுப்பழக்கத்துக்கு அடிமையான நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் இருந்தாா். மேலும் தனது நண்பா்கள், உறவினா்களிடம் அதிகளவில் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், குடியிருக்கும் வீட்டை விற்பனை செய்ய வேண்டுமென மனைவி, மகளை நாராயணசாமி வற்புறுத்தி வந்தாா். மேலும், மகள் மதுமிதாவைக் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பிரச்னையால் மன உளைச்சலில் இருந்த தாய் சுமித்ரா, மகள் மதுமிதா ஆகியோா் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனா்.

இதன்படி மதுமிதா பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்தும், சுமித்ரா சா்க்கரை, ரத்தக் கொதிப்பு மாத்திரைகளை அதிகளவில் தின்றும் தற்கொலைக்கு முயன்றனா்.

வீட்டில் மயங்கிக் கிடந்த அவா்களை உறவினா்கள் மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மதுமிதாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். சுமித்ரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்தச் சம்பவம் குறித்து சுமித்ரா அளித்த புகாரின் அடிப்படையில், தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT