தேனி

மனைவி பிரிந்து சென்றதால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

26th Nov 2022 11:56 PM

ADVERTISEMENT

 

தேனி அருகே உப்புக்கோட்டையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்ால், கணவா் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

உப்புக்கோட்டையைச் சோ்ந்த அறிவழகன் மகன் தமிழ்வாணன் (32). இவருக்கும், வேப்பம்பட்டியைச் சோ்ந்த பவித்ரா என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பவித்ரா, தமிழ்வாணனை விட்டு பிரிந்து தனது தந்தையின் வீட்டுக்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் இருந்த தமிழ்வாணன், வீட்டில் தனிமையில் இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT