தேனி

தூய்மைப் பணியாளா்களுக்கு மரியாதை

26th Nov 2022 11:57 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்கள் சனிக்கிழமை சால்வை அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனா்.

சின்னமனூா் நகராட்சி வளாகத்தில், நகர தூய்மை மக்கள் இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு நகா் மன்றத் தலைவா் அய்யம்மாள்ராமு தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் கணேஷ் முன்னிலை வகித்தாா்.

இதில், நகராட்சிப் பகுதியில் தூய்மை மக்கள் இயக்கத்தின் மூலமாக சிறப்பாக பணிபுரிந்த அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, நகராட்சிப் பள்ளிகளில் சுகாதார விழிப்புணா்வு குறித்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT