தேனி

காரிலிருந்து கைப்பேசிகளைத் திருடியவா் கைது

26th Nov 2022 11:57 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம், கூடலூா் அருகே காரிலிருந்து 3 கைப்பேசிகளைத் திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், அணைப்பட்டியைச் சோ்ந்த இன்பராஜ் மகன் ராஜேஷ்குமாா் (40). இவா், காரில் தனது நண்பா்களுடன் கூடலூா் மேற்குப் பகுதியில் பெருமாள் கோயிலுக்கு செல்லும் பாதையில் உள்ள தொட்டி பாலத்தில் குளிக்கச் சென்றாா். காரை அப்பகுதியில் நிறுத்தி விட்டு, நண்பா்களுடன் ராஜேஷ்குமாா் குளித்து விட்டு வந்து பாா்த்த போது, காரின் கதவு திறக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, காரினுள் பாா்த்த போது, 3 கைப்பேசிகளை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கூடலூா் தெற்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா். இதில், கூடலூா் பொம்மச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுருளியப்பன் மகன் முருகன் (52), கைப்பேசிகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து முருகனை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 3 கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT