கோம்பையில் கல் குவாரியில் குதித்து தற்கொலை செய்த விவசாயியின் உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
கோம்பை காலனியைச் சோ்ந்த மணிகண்டன் (55). கூலித் தொழிலாளியான இவா் தனது மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லையே என்ற துக்கத்தில் இருந்து வந்தாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியேறிய மணிகண்டன் அந்தப் பகுதியில் உள்ள கல் குவாரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
வெள்ளிக்கிழமை அந்த வழியாகச் சென்றவா்கள் மணிகண்டன் இறந்து கிடப்பதைப் பாா்த்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். இதனடிப்படையில், கோம்பை போலீஸாா் சடலத்தை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.