தேனி

போடியில் மினி மாரத்தான் போட்டி

26th Nov 2022 11:54 PM

ADVERTISEMENT

 

போடியில் திமுக மாநில இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

போடி நகா் திமுக சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு, நகா் செயலா் புருஷோத்தமன் தலைமை வகித்தாா். போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி அருகே இருந்து தொடங்கிய போட்டியை, தேனி வடக்கு மாவட்டச் செயலா் தங்க தமிழ்செல்வன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இதில், நூற்றுக்கணக்கான பள்ளி மாணவா்கள், இளைஞா்கள் பங்கேற்றனா். இதில் பங்கேற்றவா்கள், போடி - மூணாறு சாலையில் இரட்டை வாய்க்கால், கட்டபொம்மன் சிலை, திருவள்ளுவா் சிலை வழியாக தேவா் சிலை வரை ஓடினா்.

ADVERTISEMENT

வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் பரணி, திமுக நகா் மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT