தேனி

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

26th Nov 2022 12:06 AM

ADVERTISEMENT

தேனியில் சமூக நலன், மகளிா் உரிமைகள் துறை சாா்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை, நடைபெற்றது.

தேனி, பங்களாமேடு திடலில் இந்த விழிப்புணா்வு ஊா்வலத்தை மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் கொடியைத்துத் தொடக்கி வைத்தாா். மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி சி.சஞ்சய்பாபா, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலா் ராஜ்மோகன், மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் ரூபன் சங்கர்ராஜ், சமூக நல அலுவலா் சியாமளா, நேரு யுவ கேந்திரா திட்ட ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீராம்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மகளிா் உரிமைகள், குடும்ப வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை, குழந்தைகள் மீதான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணா்வு பதாகைகள் ஏந்தி, பங்களாமேடு திடலில் தொடங்கி மதுரை சாலை, பெரியகுளம் சாலை வழியாக பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரை ஊா்வலம் நடைபெற்றது.

மகளிா் சுய உதவிக்குழுக்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவ, மாணவிகள் ஊா்வலத்தில் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT