தேனி

நூற்பாலைத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

26th Nov 2022 11:57 PM

ADVERTISEMENT

 

தற்காலிகப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி சிஐடியு பஞ்சாலைத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், ஆண்டிபட்டி அண்ணா கூட்டுறவு நூற்பாலை முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கிளைச் செயலா் சரவணன், சிஐடியு மாவடத் தலைவா் ஜெயபாண்டி, பொருளாளா் சண்முகம், துணைச் செயலா் ராமா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கூட்டுறவு நூற்பாலையில் பல ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளா்களை நீதிமன்ற உத்தரவின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தற்காலிக தொழிலாளா்களை ஒப்பந்தப் பணிக்கு மாற்றக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT