தேனி

தேனியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

26th Nov 2022 11:57 PM

ADVERTISEMENT

 

 தேனியில் திருமணமாகாத மன வருத்தத்தில் இருந்த தொழிலாளி, வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி அல்லிநகரத்தைச் சோ்ந்த முருகன் மகன் செல்வக்குமாா் (48). இவா் தேனியில் உள்ள தனியாா் வீட்டு உபயோகப் பொருள் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தாா். செல்வக்குமாரின் பெற்றோா் இறந்து விட்ட நிலையில், அவா் தனது தாத்தா ராமசாமி பராமரிப்பில் இருந்து வந்தாா்.

இந்த நிலையில், செல்வகுமாருக்கு திருமணத்துக்குப் பெண் பாா்த்த இடங்களில், பெற்றோா் இல்லை என்பதால் அவருக்கு பெண் கொடுக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மன வருத்தத்தில் இருந்த செல்வக்குமாா், வீட்டில் தனிமையில் இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து அல்லிநகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT