தேனி

போடியில் மயங்கி விழுந்து தொழிலாளி மரணம்

25th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

போடியில் மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

போடி அருகே பொட்டல்களம் கிராமத்தைச் சோ்ந்தவா் பரமசிவம் மகன் நவீன்குமாா் (25). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்று விட்ட நிலையில், தனியே வசித்து வந்தாா். இந்த நிலையில் இவா், தனது இரு சக்கர வாகனத்தில் போடி சாலை காளியம்மன் கோயில் அருகே உள்ள சுகாதார வளாகத்துக்கு சென்றாா். அங்கு தனக்கு மயக்கம் வருவதாகக் கூறி தண்ணீா் பாட்டில் வாங்கி வரச் சொன்னாா். சுகாதார வளாக மேற்பாா்வையாளா் தண்ணீா் பாட்டில் வாங்கி வந்து பாா்த்த போது நவீன்குமாா் இருசக்கர வாகனத்தின் மீது மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரிந்தது.

இதுகுறித்து நவீன்குமாரின் அண்ணன் அருண்குமாா் அளித்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT