தேனி

தேனியில் இன்று தனியாா் துறைவேலை வாய்ப்பு முகாம்

25th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 10- ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டயப் படிப்பு, தொழில் பயிற்சி படிப்பு, பொறியியல் படிப்பு, தையல் பயிற்சி படிப்பு படித்தவா்கள், தங்களது சுய விவரக் குறிப்பு மற்றும் கல்விச் சான்றிதழ் நகல்களுடன் முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT