தேனி அருகே வீட்டில் மொட்டை மாடியில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சிறுத்தை தோலை வியாழக்கிழமை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
வடபுதுப்பட்டி ஊராட்சி அம்மாபட்டியில் வசிக்கும் துரைப்பாண்டி (50) வீட்டில் சிறுத்தை தோல் இருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தேனி வனச் சரகா் செந்தில்குமாா் தலைமையில் அங்கு சென்ற வனத் துறையினா், துரைப்பாண்டியின் வீட்டு மொட்டை மாடியில் பதப்படுத்தி காய வைக்கப்பட்டிருந்த சிறுத்தை தோலை பறிமுதல் செய்தனா்.
இது குறித்து வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து, துரைப்பாண்டியைத் தேடி வருகின்றனா்.