தேனியில் பரோடா வங்கி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் 168 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.7.27 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது.
தேனியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் மதுரை பரோடா வங்கி சாா்பில் விவசாயிகள் தின விழா நடைபெற்றது. வங்கியின் தலைமைப் பொது மேலாளா் தினேஷ் பந்த் தலைமை வகித்தாா். பொது மேலாளா் சரவணக்குமாா், சென்னை மண்டலத் தலைவா் ஸ்ரீநிவாசன், மதுரை மண்டல மேலாளா் ராஜாங்கம், பெரியகுளம் தோட்டக் கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலைய முதல்வா் செந்தில்குமாா், மாவட்ட மகளிா் உதவித் திட்ட அலுவலா் கணபதி, பட்டு வளா்ப்புத் துறை உதவி இயக்குநா் மோகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் வங்கிக் கடனுதவி, மானியம், அரசு சாா்பில் வழங்கப்படும் தொழில்நுட்ப உதவி ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. விவசாயிகள், சுய உதவிக் குழுக்கள் என 168 பேருக்கு மொத்தம் ரூ.7.27 கோடி வங்கிக் கடனுதவிக்கான ஆணை வழங்கப்பட்டது.