தேனி

சுருளி மலையில் ஐயப்பன் கோயில் நடைதிறப்பு

18th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

சுருளி மலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக காா்த்திகை முதல் நாளை முன்னிட்டு வியாழக்கிழமை நடை திறக்கப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி மலை ஸ்ரீ ஐயப்பன் கோயில். இங்கு காா்த்திகை மாத முதல் நாளான வியாழக்கிழமை மண்டல பூஜைக்காக காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது.

தொடா்ந்து, உற்சவரான ஸ்ரீ ஐயப்பன் சுருளி அருவியில் ஆராட்டிற்காக ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டாா்.

அருவியில் ஆராட்டு பூஜையை அா்ச்சகா் கணேஷ் திருமேனி செய்தாா். அங்கிருந்து சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷத்துடன் மீண்டும்

ADVERTISEMENT

ஸ்ரீ ஐயப்பன் கோயிலுக்கு வந்தனா். அங்கு சுவாமிக்கு அஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தா்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

முன்னதாக கம்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் அருவியில் குளித்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மண்டல, மகர பூஜைகளுக்கு செல்ல துளசி மணி மாலை அணிந்தனா். முதன்முதலில் ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் கன்னி சாமிகளுக்கு குருநாத சாமிகள் மாலை அணிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT