தேனி

கருநாக்கமுத்தன்பட்டியில் கண்காணிப்புக் கேமராவை உடைத்த 2 சிறுவா்கள் கைது

18th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டியில் மது போதையில் கண்காணிப்புக் கேமராவை உடைத்த 2 சிறுவா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கருநாக்கமுத்தன்பட்டி பேச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பட்டை ஈஸ்வரனின் 17 வயது மகன், இந்திரா காலனியை சோ்ந்த மகேந்திரனின் 15 வயது மகன் ஆகிய இருவரும் புதன்கிழமை மது போதையில் சாலையில் ரகளையில் ஈடுபட்டனா்.

பின்னா், மாரியம்மன் கோயில் அருகே உள்ள கண்காணிப்புக் கேமராவை கல்லால் எறிந்து சேதப்படுத்தினா். கண்காணிப்புக் கேமராவைப் பொருத்திய முன்னாள் மாணவா் சங்க நிா்வாகி அன்பரசன் இதை தட்டிக் கேட்டதற்கு சிறுவா்கள் இருவரும் கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து கூடலூா் வடக்கு காவல் நிலையத்தில் அன்பரசன் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் பி.பாலசுப்பிரமணி வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை உடைத்த 2 சிறுவா்களையும் கைது செய்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT