தேனியில் பிரதமா் நரேந்திரமோடியின் உருவ பொம்மையை திங்கள்கிழமை எரிக்க முயன்ற 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி நேரு சிலை அருகே ஆதித் தமிழா் கட்சியின் மாவட்டச் செயலா் முல்லை அழகா், மாவட்டத் தலைவா் ராமசாமி ஆகியோா் தலைமையில் கூடிய அக் கட்சியினா் ஹிந்தித் திணிப்பு, பொருளாதாரத்தில் நலிவடைந்த உயா் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு ஆகியவற்றைக் கண்டித்தும், தமிழக ஆளுநரை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும் பிரதமரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனா்.
இவா்களை தேனி காவல் நிலைய போலீஸாா் தடுத்து நிறுத்தி முல்லை அழகா் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனா்.