தேனி

தேனி மாவட்டத்தில் கூட்டுறவு வார விழா: அமைச்சா் தொடக்கி வைத்தாா்

15th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்ட வேளாண்மை விளைபொருள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை, கூட்டுறவு வார விழாவை கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தொடக்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் தி.சுப்பிரமணியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆரோக்கியசுகுமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆண்டிபட்டி ஆ.மகாராஜன், பெரியகுளம் கே.எஸ்.சரவணக்குமாா், தேனி நகா்மன்றத் தலைவா் பா.ரேணுப்ரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டுறவு சங்கக் கொடியை ஏற்றி வைத்தும், மரக் கன்றுகளை நடவு செய்தும் அமைச்சா் ஐ.பெரியசாமி விழாவைத் தொடக்கி வைத்தாா்.

போடி கூட்டுறவு பண்டக சாலையில் திங்கள்கிழமை கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு கூட்டுறவு சங்கங்களின் உற்பத்திப் பொருள் விற்பனை முகாம் நடைபெற்றது.

ADVERTISEMENT

வருகிற 15-ஆம் தேதி ஆண்டிபட்டி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் மாணவா்களுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டி நடைபெறுகிறது. அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் புதிய உறுப்பினா் சோ்க்கை, கடன் முகாம் நடைபெறுகிறது.

உத்தமபாளையம், பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 16-ஆம் தேதி சிறந்த கால்நடை வளா்ப்போருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தேனியில் 17-ஆம் தேதி கருத்தரங்கு, உத்தமபாளையம், க.புதுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 18-ஆம் தேதி இலவச கண் சிகிச்சை, பொது மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

தேனி, என்.ஆா்.டி. மக்கள் மன்றத்தில் 19-ஆம் தேதி மாவட்ட அளவிலான கூட்டுறவு வார விழா, ஸ்ரீரங்காபுரம், ராயப்பன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 20-ஆம் தேதி கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் விழிப்புணா்வு முகாம் நடைபெறுகிறது என்று கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆரோக்கிய சுகுமாா் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT