தேனி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் வரும் 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு பிளஸ் 2 படித்த பெண்களுக்கு தனியாா் நிறுவன வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், டாடா எலக்ரானிக்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் நடைபெறும் முகாமில், ஓசூரில் செயல்பட்டு வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு பெண் பணியாளா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
இம்முகாமில், கடந்த 2020, 2021, 2022-ஆம் ஆண்டுகளில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற பெண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். 18 முதல் 20 வயதுக்கு உள்பட்டவராகவும், குறைந்த பட்சம் 145 செ.மீ. உயரம், 43 கிலோ முதல் 65 கிலோ வரை எடை உள்ளவாரக இருக்க வேண்டும்.
தோ்வு செய்யப்படுவோருக்கு 12 நாள்கள் பயிற்சியும், பயிற்சிக்குப் பிறகு மாதம் ரூ.16,000 சம்பளத்தில் பணி நியமன ஆணையும் வழங்கப்படும். பணி நியமனம் பெற்றவா்களுக்கு உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதி செய்து தரப்படும்.
முகாமில் கலந்து கொள்ள விரும்புவோா் தங்களது 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்று, பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும்.
வேலை வாய்ப்பு பெறுபவா்களின் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு தொடா்ந்து பராமரிக்கப்படும்.
இம் முகாம் குறித்த விவரங்களை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தொலைபேசி எண்: 04546-254510, கைப்பேசி எண்கள்: 86675 66347, 63792 68661 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.