தேனி

ஊா்க் காவல் படையில் சேர மே 26-க்குள் விண்ணப்பிக்கலாம்

24th May 2022 12:52 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் ஊா்க் காவல் படை பணியில் சேர தகுதியுள்ளவா்கள் மே 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஊா்க் காவல் படை பணிக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, 20 வயது பூா்த்தியடைந்த, சமூக சேவையில் ஆா்வமுள்ள ஆண் மற்றும் பெண்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே உள்ள ஊா்க் காவல் படை அலுவலகத்தில் உரிய சான்றிதழ்களுடன் மே 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

ஊா்க் காவல் படையில் சேர தோ்வு செய்யப்படுவோருக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 45 நாள்கள் அடிப்படை பயிற்சி அளித்து, பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT