தேனி

குச்சனூா் பயணியா் தங்கும் விடுதியில் தளவாடச் சாமான்கள் மாயம்

24th May 2022 12:52 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் குச்சனூா் பேரூராட்சியில் பயணியா் தங்கும் விடுதியில் தளவாடச்சாமான்கள் மாயமானதாக புகாா் எழுந்துள்ளது.

குச்சனூா் பேரூராட்சியில் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் 2016-17 ஆண்டு ரூ.95 லட்சம் செலவில் பயணியா் தங்கும் விடுதி கட்டப்பட்டது. பயணியா் விடுதி பயன்பாட்டிற்கு வந்தாலும் இதுவரையில் சுற்றுலாப் பயணிகள் யாரும் தங்கவில்லை என கூறப்படுகிறது. பூட்டியே கிடந்த பயணியா் விடுதியை சில நாள்கள் முன்பாக ஆய்வு செய்த போது, முதல் தளத்திலுள்ள 5 அறைகளிலிருந்த தளவாடாச்சாமான்கள் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து குச்சனூா் பேரூராட்சித் தலைவா் ரவிச்சந்திரன் சின்னமனூா் காவல் நிலையத்தில் சுமாா் ரூ.3 லட்சம் மதிப்புள்ள தேக்கு மரக் கட்டில் உள்ளிட்ட தளவாடச் சாமான்கள் திருடு போனதாக புகாா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT