பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் புதன்கிழமை (மே 25) மாவட்ட நிா்வாகம் சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தலைமையில், லட்சுமிபுரம், எம்.என்.பி. திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் முகாமில், பெரியகுளம் வட்டாரத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, அரசு நலத் திட்ட உதவிகள் குறித்து மனு அளித்து பயனடையலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.