தேனி

ஸ்ரீரங்கபுரத்தில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம்

24th May 2022 12:52 AM

ADVERTISEMENT

தேனி அருகே ஸ்ரீரங்கபுரத்தில் கம்மவாா் சங்கம் பொறியியல் கல்லூரி சாா்பில் திங்கள்கிழமை, நாட்டு நலப் பணித் திட்ட முகாம் நடைபெற்றது.

தேனி கம்மவாா் சங்கத் தலைவா் நம்பெருமாள் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பொன்னுச்சாமி, கல்லூரிச் செயலா் சந்திரசேகரன், கல்லூரி முதல்வா் சீனிவாசராகவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இம்முகாமில் நீா்மேலாண்மை, மின் சிக்கனம், பேரிடா் மேலாண்மை மற்றும் சுய தொழில்கள் குறித்து நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் மூலம் கிராம மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் மருதராஜ் செய்திருந்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT