தேனி

வீட்டில் கதவை உடைத்து 8 பவுன் நகைகள் திருட்டு

24th May 2022 12:51 AM

ADVERTISEMENT

தேனி அருகே அன்னஞ்சியில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் தங்க நகைகள் திருடு போனதாக திங்கள்கிழமை, காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

அன்னஞ்சி, சூரியா நகரைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் சிவக்குமாா். இவா், கடந்த மே 21-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு போடியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளாா். வீட்டிற்கு திரும்ப வந்து பாா்த்த போது, வீட்டின் முன்புறக் கதவை உடைத்து அறைக்குள் புகுந்து, பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகளை யாரோ திருடிச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து சிவக்குமாா் அளித்த புகாரின் மீது, அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT