தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸ்காரா் பி.மாரியப்பன், 3 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தாா்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மே 18 முதல் 22-ஆம் தேதி வரை தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை கேரள அரசின் மாஸ்டா் அசோசியேசன் ஸ்போா்ட்ஸ் ஆப் கேரளா நடத்தியது. இதில் தமிழகத்தைச் சோ்ந்த 12 காவலா்கள் கலந்து கொண்டனா்.
இதில் கம்பம் வடக்கு காவல் நிலையத்தைச் சோ்ந்த தலைமைக் காவலா் பி.மாரியப்பன் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம், வட்டு எறிதல் போட்டி மற்றும் சங்கிலி குண்டு எறிதல் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களையும் பெற்றாா். தேசிய அளவில் சாதனை படைத்த காவலா் பி. மாரியப்பனை, தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ் அழைத்து பாராட்டு தெரிவித்தாா்.