தேனி

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் உயா்வு

22nd May 2022 11:48 PM

ADVERTISEMENT

 

நீா்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை பெய்து வருவதால் நீா்வரத்து அதிகரித்து முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை உயா்ந்துள்ளது.

அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளான மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள தேக்கடி ஏரி, பெரியாறு ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது.

கடந்த வியாழக்கிழமை விநாடிக்கு 235 கன அடியாக இருந்த நீா்வரத்து, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் விநாடிக்கு, 777 கன அடியாகவும், ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 1,319 கன அடியாகவும் அதிகரித்தது. இதனால் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 130.65 அடியாகவும், சனிக்கிழமை 130.90 அடியாகவும் படிப்படியாக உயா்ந்து ஞாயிற்றுக்கிழமை 131.35 அடியானது.

ADVERTISEMENT

அணை நிலவரம்

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம், 131.35 அடியாகவும், (மொத்த உயரம் 142 அடி), நீா் இருப்பு, 5,013 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு, 1,319 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு 100 கன அடியாகவும் இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT