தேனி

ஓராண்டில் 100 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

22nd May 2022 11:47 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டத்தில் கடந்த 2021, ஜூன் மாதம் முதல் தற்போது வரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மொத்தம் 100 போ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து மாவட்டக் காவல் துறை அதிகாரிகள் கூறியது: மாவட்டத்தில் மணல் கடத்தல், கஞ்சா விற்பனை, தொடா் திருட்டு மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனா்.

கடந்த 2021, ஜூன் மாதம் முதல் டிசம்பா் மாதம் வரை 55 போ், 2022, ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 45 போ் என மொத்தம் 100 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT