தேனி

போடி அருகே பைக் மோதி முதியவா் பலி

20th May 2022 10:26 PM

ADVERTISEMENT

போடி அருகே, இருசக்கர வாகனம் மோதி முதியவா் இறந்தது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சின்ன பொட்டிப்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜக்கையன் (65). கூலித் தொழிலாளி. இவா் மே 11 ஆம் தேதி சின்னப்பொட்டிப்புரம் சுடுகாடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவா், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜக்கையன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Tags : போடி
ADVERTISEMENT
ADVERTISEMENT