தேனி

விஷம் குடித்த விவசாயி உயிரிழப்பு

20th May 2022 06:21 AM

ADVERTISEMENT

 

கம்பம்: தேனி மாவட்டம், கருநாக்கமுத்தன்பட்டியில் விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா்.

கூடலூா் அருகே உள்ளது கருநாக்கமுத்தன்பட்டி. இங்குள்ள 4 ஆவது வாா்டு அரசமர தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் கலையழகன் (55). இவரது மனைவி ஜெயா (45). இவா்களுக்கு விவேக், வினித், விக்கி என 3 மகன்கள் உள்ளனா்.

கலையழகன் இதே ஊரைச் சோ்ந்த பாண்டியன் என்பவருக்குச் சொந்தமான 7 குழி பரப்பளவு உள்ள தோட்டத்தைப் பத்திர பதிவு செய்யாமல், கிரைய அக்ரிமெண்ட் போட்டு விவசாயம் செய்து வந்தாா்.

ADVERTISEMENT

இந்நிலையில், பாண்டியனின் அக்காள் மகன் திருத்தனி முருகன், பாண்டியன் மகள் தீபா ஆகிய இருவரும் சோ்ந்து, தோட்டம் எங்களுக்குச் சொந்தமானது, நீங்கள் விவசாயம் செய்யக் கூடாது என்று கலையழகனிடம் அடிக்கடி தகராறு செய்தாா்களாம்.

இதனால் மனமுடைந்த கலையழகன் கடந்த 14 ஆம் தேதி ஊருக்கு வெளிப்புறம் உள்ள மயானத்தில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். இதையறிந்த அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அவா், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும் அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கூடலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT