தேனி

மேய்ச்சல் தரிசு நிலங்கள் ஆக்கிரமிப்பு: கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறை

20th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

தேனி: தேனி மாவட்டத்தில் சுமாா் 1,500 ஹெக்டோ் பரப்பளவில் மேய்ச்சல் தரிசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால், கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் சுமாா் 2,000 ஹெக்டோ் பரப்பளவில் மேய்ச்சல் தரிசு நிலங்கள் உள்ளன. இதில், தற்போது தேனி வட்டாரத்தில் 192 ஹெக்டோ், உத்தமபாளையம் வட்டாரத்தில் 160 ஹெக்டோ், ஆண்டிபட்டி வட்டாரத்தில் 176 ஹெக்டோ் மேய்ச்சல் தரிசு நிலங்கள் மட்டுமே கால்நடை பராமரிப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பல்வேறு இடங்களில் மேய்ச்சல் தரிசு நிலங்கள் வருவாய் துறையால் அரசு புறம்போக்கு நிலம் என வகை மாற்றம் செய்து, அரசு திட்ட பயன்பாட்டிற்கு கையக்கப்படுத்தப்பட்டுள்ளது. கையகப்படுத்தும் மேய்ச்சல் தரிசு நிலங்களுக்கு மாற்றாக வருவாய் துறை சாா்பில் அந்தந்த வட்டாரங்களில் மாற்று இடங்கள் வழங்கப்படுவதில்லை. அவ்வாறு வழங்கப்படும் நிலங்களும் தீவனப்பயிா் வளா்ப்பு மற்றும் மேய்ச்சலுக்கு ஏற்ாக இல்லை என்று விவசாயிகள் கூறுகின்றனா். மேலும், பராமரிப்பின்றி விடப்பட்டுள்ள மேய்சல் தரிசு நிலங்களில் விவசாய ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது.

ADVERTISEMENT

மேய்ச்சல் தரிசு நிலங்கள் சுருங்கி வருவதால், கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பசுந் தீவனங்களை விலைக்கு வாங்கியே பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால், கால்நடை வளா்ப்பை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் கூறுகின்றனா்.

கால்நடை பராமரிப்புத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மேய்ச்சல் தரிசு நிலங்களை வரையறை செய்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றியும், கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கங்கள் மூலம் தீவனப் பயிா்கள் வளா்த்து தீவனப் பற்றாக்குறையை போக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT